தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வகையிலும் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் அல்ல என்றும், கடந்த கால வன்முறை, கொள்ளை மற்றும் அரச சொத்து அழிப்பு போன்ற கறன்படிந்த வரலாற்றை மூடிமறைக்கவே இவர்கள் 'திசைகாட்டி' என்ற புதிய லோகோவின் கீழ் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டால், அதனைக் கொண்டு பல புத்தகங்களையே எழுத முடியும் எனத் தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பெற்ற பின்னர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நாளாந்தம் புதிய பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் போக்கே தொடர்கிறது என்றும், 'தித்வா' புயல் அனர்த்தத்தின் போது பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒரு கூரைத் தகடு சேதமடைந்திருந்தாலும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறிய போதிலும் இதுவரை ஒருவருக்குமே அந்தப் பணம் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நீதித்துறை மீது தங்களுக்கு அசைக்க முடியாத மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதாகக் குறிப்பிட்ட துமிந்த திசாநாயக்க, கடந்த மே முதலாம் திகதி தொழிலாளர் தின மேடையில் ஜனாதிபதி அநுர குமார ஆற்றிய உரை நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான கடுமையான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
வரும் 25ஆம் திகதி கைதட்டுவதற்குத் தயாராக இருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வரவுள்ளதாகவும் ஜனாதிபதி அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் சுயாதீன நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே, அது குறித்து ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்கிறது என்றால், அவர் அந்த நீதிபதிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அந்த நீதிபதி தீர்ப்பை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்ற இரு காரணங்களைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என அவர் விவரித்தார்.
மேலும், மே மாதம் 19ஆம் திகதியுடன் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் நிறைவடையும் நிலையில், யுத்தக் காலத்தில் வடக்கில் இயங்கிய பிரபாகரனின் புலி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் கூட பிரபாகரன் தலையிட்டதாகத் தாங்கள் கேள்விப்படவில்லை என்றும், ஆனால் இன்று அநுர குமார பிரபாகரனையும் மிஞ்சிச் சென்றுள்ளார் என்றும் அவர் சாடினார்.
நிலக்கரி ஆணைக்குழுவின் தீர்ப்பு குறித்து ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா முன்கூட்டியே தீர்மானிப்பதைக் காணும்போது, தீர்ப்புகளை ஜனாதிபதியும் ரில்வின் சில்வாவும் வழங்குவதாயின் இந்த நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என்ற கேள்வி எழுகிறது என்றார். இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துமே அரசியல்மயமாக்கப்பட்டு, நீதிமன்றத்தின் மீதிருந்த மக்கள் நம்பிக்கை முழுமையாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, இந்த அரசாங்கத்தை நம்பி, ஏமாந்து வாக்களித்த பெருமளவிலான மக்கள் நாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுவாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொள்ள இலங்கை மக்கள் வெட்கப்பட்டாலும், இந்த வெட்கத்தைக் காட்டிக்கொண்டு இன்னும் மௌனமாக இருந்தால் நாடு முழுமையாக அழிந்துவிடும் என எச்சரித்தார்.
எனவே, ஏமாற்றப்பட்ட மக்கள் அனைவரும் இன்னும் ஏமாறப் போகிறார்களா அல்லது இப்போதாவது விழித்தெழுந்து இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடப் போகிறார்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் அழைப்புடன் விடுத்தார்.
அநுரவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் – துமிந்த அறைகூவல் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வகையிலும் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் அல்ல என்றும், கடந்த கால வன்முறை, கொள்ளை மற்றும் அரச சொத்து அழிப்பு போன்ற கறன்படிந்த வரலாற்றை மூடிமறைக்கவே இவர்கள் 'திசைகாட்டி' என்ற புதிய லோகோவின் கீழ் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டால், அதனைக் கொண்டு பல புத்தகங்களையே எழுத முடியும் எனத் தெரிவித்தார். அதிகாரத்தைப் பெற்ற பின்னர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நாளாந்தம் புதிய பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் போக்கே தொடர்கிறது என்றும், 'தித்வா' புயல் அனர்த்தத்தின் போது பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒரு கூரைத் தகடு சேதமடைந்திருந்தாலும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறிய போதிலும் இதுவரை ஒருவருக்குமே அந்தப் பணம் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.நாட்டின் நீதித்துறை மீது தங்களுக்கு அசைக்க முடியாத மதிப்பும் நம்பிக்கையும் இருப்பதாகக் குறிப்பிட்ட துமிந்த திசாநாயக்க, கடந்த மே முதலாம் திகதி தொழிலாளர் தின மேடையில் ஜனாதிபதி அநுர குமார ஆற்றிய உரை நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான கடுமையான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். வரும் 25ஆம் திகதி கைதட்டுவதற்குத் தயாராக இருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வரவுள்ளதாகவும் ஜனாதிபதி அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். நீதிமன்றத்தில் சுயாதீன நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே, அது குறித்து ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்கிறது என்றால், அவர் அந்த நீதிபதிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அந்த நீதிபதி தீர்ப்பை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்ற இரு காரணங்களைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என அவர் விவரித்தார்.மேலும், மே மாதம் 19ஆம் திகதியுடன் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் நிறைவடையும் நிலையில், யுத்தக் காலத்தில் வடக்கில் இயங்கிய பிரபாகரனின் புலி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் கூட பிரபாகரன் தலையிட்டதாகத் தாங்கள் கேள்விப்படவில்லை என்றும், ஆனால் இன்று அநுர குமார பிரபாகரனையும் மிஞ்சிச் சென்றுள்ளார் என்றும் அவர் சாடினார். நிலக்கரி ஆணைக்குழுவின் தீர்ப்பு குறித்து ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா முன்கூட்டியே தீர்மானிப்பதைக் காணும்போது, தீர்ப்புகளை ஜனாதிபதியும் ரில்வின் சில்வாவும் வழங்குவதாயின் இந்த நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் என்ற கேள்வி எழுகிறது என்றார். இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துமே அரசியல்மயமாக்கப்பட்டு, நீதிமன்றத்தின் மீதிருந்த மக்கள் நம்பிக்கை முழுமையாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இறுதியாக, இந்த அரசாங்கத்தை நம்பி, ஏமாந்து வாக்களித்த பெருமளவிலான மக்கள் நாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுவாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொள்ள இலங்கை மக்கள் வெட்கப்பட்டாலும், இந்த வெட்கத்தைக் காட்டிக்கொண்டு இன்னும் மௌனமாக இருந்தால் நாடு முழுமையாக அழிந்துவிடும் என எச்சரித்தார். எனவே, ஏமாற்றப்பட்ட மக்கள் அனைவரும் இன்னும் ஏமாறப் போகிறார்களா அல்லது இப்போதாவது விழித்தெழுந்து இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடப் போகிறார்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் அழைப்புடன் விடுத்தார்.