கணபதி தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாத அபாய நிலையில் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
புஸ்ஸல்லாவப் பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து கம்பளை - கனபதி தோட்டப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாடசாலைகளில் வசிக்கும் மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது
இப் பகுதியில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் தலைவர் சுகிர்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில்
வடக்கு மாகாண மக்களிப்பின் பங்களிப்புடனும் நீரோ அமைப்பின் நிதி பங்கப்புடன் இந்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
கணபதி தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாத அபாய நிலையில் உள்ளனர். மண்சரிவு அபாயம் இன்னும் அந்தப் பிரதேசத்தில் நீடிக்கின்றது.
அதன்படி ஜனாதிபதி அறிவித்து போல் குறித்த மக்களுக்கு நிலம் மற்றும் வீட்டை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மண்சரிவு அபாயத்தால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் - சாணக்கியன் எம்.பி. கணபதி தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாத அபாய நிலையில் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். புஸ்ஸல்லாவப் பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கம்பளை - கனபதி தோட்டப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாடசாலைகளில் வசிக்கும் மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது இப் பகுதியில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் தலைவர் சுகிர்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில் வடக்கு மாகாண மக்களிப்பின் பங்களிப்புடனும் நீரோ அமைப்பின் நிதி பங்கப்புடன் இந்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. கணபதி தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாத அபாய நிலையில் உள்ளனர். மண்சரிவு அபாயம் இன்னும் அந்தப் பிரதேசத்தில் நீடிக்கின்றது. அதன்படி ஜனாதிபதி அறிவித்து போல் குறித்த மக்களுக்கு நிலம் மற்றும் வீட்டை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.