வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என ஜனநாய தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் வன்னித் தேர்தல் தொகுதியில் ஜனநாயக தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றோம். எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு கடும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னரே போட்டியில் களமிறங்கியுள்ளோம். கடந்த முறை தேர்தல்களில் நாம் சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டோம். இம்முறை நாம் வெல்வோம் என தெரிந்த நிலையில் எமது வேட்புமனு சதியால் நிராகரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் சென்று நாம் எங்ளுக்கான நீதியைப் பெற்றுள்ளோம். அதேபோல் நாங்கள் பாராளுமன்றம் சென்றால் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக அமையும். உங்களது தீர்ப்பு தான் நாங்கள் பாராளுமன்றம் செல்ல வழிவகுக்கும். உங்கள் வாக்கு வீண் போகாது. வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றி காட்டுவோம். ஏனைய மாவட்டங்கள் எமது வன்னியை திரும்பி பார்க்கும் அளவுக்கு எங்களது வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம். தபால் பெட்டி சின்னத்திற்கு நம்பி வாக்களியுங்கள். எங்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் வன்னியின் மக்களின் குரலாக ஒழிப்போம் எனத் தெரிவித்தார்.
வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும்: ஜனநாய தேசியக் கூட்டணியின் வேட்பாளர் உதயராசா வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என ஜனநாய தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நாம் வன்னித் தேர்தல் தொகுதியில் ஜனநாயக தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றோம். எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு கடும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னரே போட்டியில் களமிறங்கியுள்ளோம். கடந்த முறை தேர்தல்களில் நாம் சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டோம். இம்முறை நாம் வெல்வோம் என தெரிந்த நிலையில் எமது வேட்புமனு சதியால் நிராகரிக்கப்பட்டது.உச்சநீதிமன்றம் சென்று நாம் எங்ளுக்கான நீதியைப் பெற்றுள்ளோம். அதேபோல் நாங்கள் பாராளுமன்றம் சென்றால் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக அமையும். உங்களது தீர்ப்பு தான் நாங்கள் பாராளுமன்றம் செல்ல வழிவகுக்கும். உங்கள் வாக்கு வீண் போகாது. வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றி காட்டுவோம். ஏனைய மாவட்டங்கள் எமது வன்னியை திரும்பி பார்க்கும் அளவுக்கு எங்களது வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம். தபால் பெட்டி சின்னத்திற்கு நம்பி வாக்களியுங்கள். எங்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் வன்னியின் மக்களின் குரலாக ஒழிப்போம் எனத் தெரிவித்தார்.