• Nov 23 2024

முல்லைத்தீவில் 'தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்' மக்கள் மேடை நிகழ்வு...! மாயமான எம்.பிகள்...!

Sharmi / May 30th 2024, 11:27 am
image

மார்ச் 12 அமைப்பினரால் 'தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் மேடை' எனும் நிகழ்வு நேற்றைய தினம் (29) நடைபெற்றது

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மேடை நாடெங்கும் மார்ச் 12 அமைப்பினரால் நடாத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் 22 ஆவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மக்கள் மேடையொன்று நேற்றைய தினம் (29) இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 

குறித்த மக்கள் மேடை நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில் 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த நிகழ்வில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் 'தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்' மக்கள் மேடை நிகழ்வு. மாயமான எம்.பிகள். மார்ச் 12 அமைப்பினரால் 'தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் மேடை' எனும் நிகழ்வு நேற்றைய தினம் (29) நடைபெற்றதுஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மேடை நாடெங்கும் மார்ச் 12 அமைப்பினரால் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 22 ஆவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மக்கள் மேடையொன்று நேற்றைய தினம் (29) இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த மக்கள் மேடை நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தில் 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அதேவேளை குறித்த நிகழ்வில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement