• Feb 11 2025

அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு...!

Sharmi / May 27th 2024, 10:17 am
image

அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு  நேற்றையதினம் (26) காலை முதல் மாலை வரை  மாளிகைக்காடு தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றது.

தூய்மையான அரசியலுக்காகச் செயற்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் இம்  மாவட்டத்தில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ உட்பட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கிராம ரீதியாக அழைக்கப்பட்ட  மூவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கேற்று தத்தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

நாம் எமது வாக்குகளை அறிவு பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். தகுதியானவர்களை மாத்திரமே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இதுவே எமது தலையான கடமையாகும் என்று மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் வைத்தே ஆக வேண்டும்.எனவே மக்கள் விழிப்படைய வேண்டும் என இக்கலந்துரையாடலில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு. அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு  நேற்றையதினம் (26) காலை முதல் மாலை வரை  மாளிகைக்காடு தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றது.தூய்மையான அரசியலுக்காகச் செயற்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் இம்  மாவட்டத்தில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ உட்பட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் கிராம ரீதியாக அழைக்கப்பட்ட  மூவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கேற்று தத்தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.நாம் எமது வாக்குகளை அறிவு பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். தகுதியானவர்களை மாத்திரமே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இதுவே எமது தலையான கடமையாகும் என்று மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.மேலும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் வைத்தே ஆக வேண்டும்.எனவே மக்கள் விழிப்படைய வேண்டும் என இக்கலந்துரையாடலில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement