மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள், கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்துள்ளார்.
இத்தகைய நடைமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஜனநாயகத்திற்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதாகவும் குறித்த பிரேரணை குறிப்பிடுகிறது.
எந்தவொரு அரசியல் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வசூலிப்பதையோ அல்லது கட்சி கணக்குகளுக்கு திருப்பி விடுவதையோ தடை செய்ய நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என தயாசிறி முன்மொழிந்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் அமைச்சர்கள் தங்கள் மாதாந்த சம்பளத்தை ஒரு பொதுவான கட்சி நிதிக்கு பங்களிப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் எடுப்பதற்கு எதிராக பிரேரணை மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள், கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சமர்ப்பித்துள்ளார்.இத்தகைய நடைமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஜனநாயகத்திற்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதாகவும் குறித்த பிரேரணை குறிப்பிடுகிறது.எந்தவொரு அரசியல் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வசூலிப்பதையோ அல்லது கட்சி கணக்குகளுக்கு திருப்பி விடுவதையோ தடை செய்ய நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என தயாசிறி முன்மொழிந்துள்ளார்.ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் அமைச்சர்கள் தங்கள் மாதாந்த சம்பளத்தை ஒரு பொதுவான கட்சி நிதிக்கு பங்களிப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.