• Oct 25 2024

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு!

Chithra / Oct 25th 2024, 12:15 pm
image

Advertisement

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் அமரவோ வாக்களிக்கவோ உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு  எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் அமரவோ வாக்களிக்கவோ உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement