• Jul 01 2025

அத்துமீறி நுழைந்த மேலும் 07 தமிழக மீனவர்கள் கைது!

Chithra / Jul 1st 2025, 1:42 pm
image

 

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11:00 மணியளவில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்த பின்னர், அந்தக் குழு கைது செய்யப்பட்டு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடிக்காக இந்திய மீனவர்கள் இந்த வாரத்தில் கைது செய்யப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தனர்.

இதன்போது, அவர்களின் இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அத்துமீறி நுழைந்த மேலும் 07 தமிழக மீனவர்கள் கைது  தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு 11:00 மணியளவில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்த பின்னர், அந்தக் குழு கைது செய்யப்பட்டு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டது.சட்டவிரோத மீன்பிடிக்காக இந்திய மீனவர்கள் இந்த வாரத்தில் கைது செய்யப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தனர்.இதன்போது, அவர்களின் இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement