• Sep 15 2024

தேர்தல் அலுவலகங்களில் இருந்து அதிரடியாக அகற்றப்படும் அரசியல்வாதிகளின் படங்கள்; தேர்தல் ஆணைக்குழு உத்தரவு

Chithra / Aug 30th 2024, 1:38 pm
image

Advertisement


 

தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த அந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல் அலுவலகங்களில் இருந்து அதிரடியாக அகற்றப்படும் அரசியல்வாதிகளின் படங்கள்; தேர்தல் ஆணைக்குழு உத்தரவு  தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த அந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement