• Sep 15 2024

திருமலையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய போராட்டத்தில் பதற்றம்- கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு..!

Sharmi / Aug 30th 2024, 2:01 pm
image

Advertisement

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட  மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் கைதாகி  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில்குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று(30) காலை 10 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் வெலிக்கடை தியாகிகள் நினைவிடத்தை நோக்கி  பேரணியாக சென்றது.

இதன்போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பேரணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும்,  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் போர் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு கவனயீர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து அவர்களோடு சேர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்   பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




திருமலையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய போராட்டத்தில் பதற்றம்- கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட  மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் கைதாகி  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தில்குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று(30) காலை 10 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் வெலிக்கடை தியாகிகள் நினைவிடத்தை நோக்கி  பேரணியாக சென்றது.இதன்போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பேரணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.இதன்போது பொலிஸாருக்கும்,  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.இதன் பின்னர் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் போர் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தோடு கவனயீர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து அவர்களோடு சேர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்   பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement