• Feb 15 2026

தரையிறங்கிய வேளை கழன்று விழுந்த சக்கரம்; அதிஸ்டவசமாக தப்பிய விமானம்!

shanuja / Jan 19th 2026, 10:28 am
image

ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் ​​விமானத்தின் மூக்கு சக்கரம்  கழன்று விழுந்துள்ளது. 


குறிப்பிட்ட பயணிகளுடன் பயணித்த விமானம் நேற்று தரையிறங்கிய வேளையிலேயே இந்த விபரீதம் இடம்பெற்றது. 


சக்கரம் கழன்று விழுந்ததில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. எனினும்  பயணிகள் எவ்வித  காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், வருவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு  விமானத்தைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


சக்கரம் கழன்று விழுந்ததில் கணப்பொழுதில் நடக்கவிருந்த பெரிய விபத்து அதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

தரையிறங்கிய வேளை கழன்று விழுந்த சக்கரம்; அதிஸ்டவசமாக தப்பிய விமானம் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் ​​விமானத்தின் மூக்கு சக்கரம்  கழன்று விழுந்துள்ளது. குறிப்பிட்ட பயணிகளுடன் பயணித்த விமானம் நேற்று தரையிறங்கிய வேளையிலேயே இந்த விபரீதம் இடம்பெற்றது. சக்கரம் கழன்று விழுந்ததில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. எனினும்  பயணிகள் எவ்வித  காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், வருவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு  விமானத்தைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சக்கரம் கழன்று விழுந்ததில் கணப்பொழுதில் நடக்கவிருந்த பெரிய விபத்து அதிஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement