மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஈரான் வான்வெளியை பல விமானங்கள் தவிர்த்துள்ளன.
போர்ச்சூழலால் ஈரான் வான்வெளியை தவிர்த்த விமானங்கள் நடுவானில் திணறிய காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்படைய வைத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், பல சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
போர்ப்பதற்றத்தால் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்பை மூடியுள்ளன. இதனால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போர்ப்பதற்றம் வலுப்பெற்றதையடுத்து வான்வெளிகள் மூடப்பட்டதுடன் ஏராளமான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் பல விமானநிலையங்களில் சிக்கித்தவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் வான்வெளியை தவிர்த்த விமானங்கள் பல என்னசெய்வதென்று தெரியாது நடுவானில் திணறிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் வான்வெளியை தவிர்க்கும் விமானங்கள்; நடுவானில் திணறிய பரபரப்புக் காட்சி. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஈரான் வான்வெளியை பல விமானங்கள் தவிர்த்துள்ளன. போர்ச்சூழலால் ஈரான் வான்வெளியை தவிர்த்த விமானங்கள் நடுவானில் திணறிய காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்படைய வைத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், பல சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.போர்ப்பதற்றத்தால் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்பை மூடியுள்ளன. இதனால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போர்ப்பதற்றம் வலுப்பெற்றதையடுத்து வான்வெளிகள் மூடப்பட்டதுடன் ஏராளமான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் பல விமானநிலையங்களில் சிக்கித்தவித்துள்ளனர். இந்த நிலையில் ஈரான் வான்வெளியை தவிர்த்த விமானங்கள் பல என்னசெய்வதென்று தெரியாது நடுவானில் திணறிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.