அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம், கிம் ஜாங் உன்னை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ஆமாம், அவருக்கும் என்னைப் பிடிக்கும் என்று பதிலளித்தார்.
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொரியப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இருந்துவந்த பிணக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதல் பதவிக் காலத்தின்போது மாறியது. டிரம்ப் மற்றும் கிம் இடையே வழக்கத்திற்கு மாறாக வலுவான உறவு நீடித்தது. டிரம்ப் இதற்கு முன்பு கிம் ஜாங் உடனான உறவை “மிக மிக அருமையான நட்பு” என்று விவரித்திருந்ததும், கிம் ஒரு புத்திசாலி என்றும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2019க்குள் நடந்தவை.
கடந்த 2019ஆம் ஆண்டு, வட கொரியாவுக்கு பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.
இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் டிரம்ப், கிம் ஜாங் உடனான உறவை நீட்டித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம், கிம் ஜாங் உன்னை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், ஆமாம், அவருக்கும் என்னைப் பிடிக்கும் என்று பதிலளித்தார்.சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொரியப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இருந்துவந்த பிணக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதல் பதவிக் காலத்தின்போது மாறியது. டிரம்ப் மற்றும் கிம் இடையே வழக்கத்திற்கு மாறாக வலுவான உறவு நீடித்தது. டிரம்ப் இதற்கு முன்பு கிம் ஜாங் உடனான உறவை “மிக மிக அருமையான நட்பு” என்று விவரித்திருந்ததும், கிம் ஒரு புத்திசாலி என்றும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2019க்குள் நடந்தவை.கடந்த 2019ஆம் ஆண்டு, வட கொரியாவுக்கு பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் டிரம்ப், கிம் ஜாங் உடனான உறவை நீட்டித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.