• Jan 27 2025

புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் கட்டிடம் திறந்துவைப்பு..!

Sharmi / Jan 25th 2025, 4:29 pm
image

புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா இன்று(25) காலை இடம்பெற்றது.

இளங்கலை மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கொண்டலடி ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

இவ் விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இசைவானர் மு.கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் கட்டிடம் திறந்துவைப்பு. புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா இன்று(25) காலை இடம்பெற்றது.இளங்கலை மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.கொண்டலடி ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் புதிய கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இசைவானர் மு.கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement