தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சுண்டிக்குளம் கல்லாறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
சுண்டிக்குளம் பேப்பாரப்பிட்டி பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோர் சுண்டிகுளம் சந்திக்கும் தொடக்கம் கடற்கரை பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 09 கிலோமீட்டர் தூரம் அளவில் அளவில் முற்று முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இதன்காரணமாக, இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை இழந்த நிலையில் நமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் தற்போது சட்டவிரோத தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நமது கடல் தொழில் முற்று முழுதாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம்(24) உழவு இயந்திரத்தில் சுண்டிக்குளம் கல்லாறு மீனவ மக்கள் கடலில் பிடிக்கின்ற மீனை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் இவ்வீதி காணப்படுவதாகவும் இதன் காரணமாக தாம் கடலில் பிடிக்கின்ற மீனைபாதி விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வீதி புனரமைக்கப்படுமாயின்நேரடியாகவே மக்கள் பலபகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்யவும் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வீதிக்கான பணத்தை மக்களின் பணமாக மக்களிடமிருந்து வரியாக அறவிடப்பட்ட பணம் திரைசேரியில் உள்ளதாகவும் அதனைக் கொண்டு வீதியை புனரமைக்க முடியும் எனவும் அத்துடன் இவ் வீதி பாரிய அளவில் சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம் பெறுவதாகவும், இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அவசர தேவை கருதி வைத்தியசாலை செல்வோர் மிக அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறுகையில்,
இவ்வீதி இவ்வருட இறுதிக்குள் முழுமையாக புணரமைப்பு பணிகள் நடைபெறும் எனவும், தற்பொழுது மீனவர் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வீதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓரளவு புனரமைப்பு செய்து தருவதாகவும் மீனவர்களுக்கு உறுதியளித்தார்.
இளங்குமரன் எம்.பி சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு விஜயம். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சுண்டிக்குளம் கல்லாறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.சுண்டிக்குளம் பேப்பாரப்பிட்டி பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடுவோர் சுண்டிகுளம் சந்திக்கும் தொடக்கம் கடற்கரை பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதி 09 கிலோமீட்டர் தூரம் அளவில் அளவில் முற்று முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.இதன்காரணமாக, இவ்வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை இழந்த நிலையில் நமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் தற்போது சட்டவிரோத தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நமது கடல் தொழில் முற்று முழுதாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்றைய தினம்(24) உழவு இயந்திரத்தில் சுண்டிக்குளம் கல்லாறு மீனவ மக்கள் கடலில் பிடிக்கின்ற மீனை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் இவ்வீதி காணப்படுவதாகவும் இதன் காரணமாக தாம் கடலில் பிடிக்கின்ற மீனைபாதி விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இவ்வீதி புனரமைக்கப்படுமாயின்நேரடியாகவே மக்கள் பலபகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்யவும் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வீதிக்கான பணத்தை மக்களின் பணமாக மக்களிடமிருந்து வரியாக அறவிடப்பட்ட பணம் திரைசேரியில் உள்ளதாகவும் அதனைக் கொண்டு வீதியை புனரமைக்க முடியும் எனவும் அத்துடன் இவ் வீதி பாரிய அளவில் சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இடம் பெறுவதாகவும், இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அவசர தேவை கருதி வைத்தியசாலை செல்வோர் மிக அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறுகையில், இவ்வீதி இவ்வருட இறுதிக்குள் முழுமையாக புணரமைப்பு பணிகள் நடைபெறும் எனவும், தற்பொழுது மீனவர் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வீதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓரளவு புனரமைப்பு செய்து தருவதாகவும் மீனவர்களுக்கு உறுதியளித்தார்.