• Jan 26 2025

பல வருடங்களாக இயங்காதிருந்த நெற்களஞ்சியசாலையை இயங்கவைக்க திட்டம்

Thansita / Jan 20th 2025, 8:25 pm
image

புதுக்குடியிருப்பில் பல வருடமாக இயங்காதிருந்த நெற்களஞ்சியசாலையை இயங்க வைக்கும் நோக்கில் இன்றையதினம் (20.01.2025) இராணுவத்தினால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெற்களஞ்சியசாலையானது கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.

இதனால் பல சமூக சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால் குறித்த இடத்தினை இராணுவத்தின் ஏற்பாட்டில் நெல் கொள்வனவை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள 593 படைப்பிரிவின் 59 பிரிவிலுள்ள இராணுவத்தினரால் குறித்த துப்பரவு பணி இடம்பெற்று கோம்பாவில் கமக்கார அமைப்பின் செயலாளர் ஏ.பிரதீபராசாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது

பல வருடங்களாக இயங்காதிருந்த நெற்களஞ்சியசாலையை இயங்கவைக்க திட்டம் புதுக்குடியிருப்பில் பல வருடமாக இயங்காதிருந்த நெற்களஞ்சியசாலையை இயங்க வைக்கும் நோக்கில் இன்றையதினம் (20.01.2025) இராணுவத்தினால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெற்களஞ்சியசாலையானது கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.இதனால் பல சமூக சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால் குறித்த இடத்தினை இராணுவத்தின் ஏற்பாட்டில் நெல் கொள்வனவை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள 593 படைப்பிரிவின் 59 பிரிவிலுள்ள இராணுவத்தினரால் குறித்த துப்பரவு பணி இடம்பெற்று கோம்பாவில் கமக்கார அமைப்பின் செயலாளர் ஏ.பிரதீபராசாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது

Advertisement

Advertisement

Advertisement