• Dec 25 2024

மின்கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு - தோட்ட உரிமையாளர் கைது

Chithra / Dec 24th 2024, 3:32 pm
image


நிக்கொல்லாவ பிரதேசத்தில் 25 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி தோட்டத்தில் பணியாற்றிய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கொல்லாவ, கிராமப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்கசிவு காரணமாக தெவஹுவ கல்பாயவில் வசித்து வந்த வி.செல்டன் பேமசிறி குமார என்ற 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் தனது தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி யானை வேலி அமைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தோட்டத்தில் வேலை செய்ய இரண்டு கூலி ஆட்களை நியமித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு - தோட்ட உரிமையாளர் கைது நிக்கொல்லாவ பிரதேசத்தில் 25 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் அனுமதியற்ற மின்கம்பியில் சிக்கி தோட்டத்தில் பணியாற்றிய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.நிக்கொல்லாவ, கிராமப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மின்கசிவு காரணமாக தெவஹுவ கல்பாயவில் வசித்து வந்த வி.செல்டன் பேமசிறி குமார என்ற 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.சந்தேகநபர் தனது தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி யானை வேலி அமைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தோட்டத்தில் வேலை செய்ய இரண்டு கூலி ஆட்களை நியமித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement