மலையகத் தோட்டங்களின் உட்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தோட்ட கடைகளில் ஒரு கிலோ நாட்டு அரிசி 250 முதல் 260 ரூபா வரை இன்றும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தாம் பெரும்பாலும் நாட்டு அரிசியையே பயன்படுத்துவதாகவும், தோட்ட உள்ளகக் கடைகளில் இருந்து 230 ரூபாவுக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டு சில்லறை விலையான நாட்டு அரிசியை வழங்குவதில்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரிசியின் விலையேற்றம் காரணமாக ஏனைய நாட்களில் கிடைக்கும் அரிசியின் அளவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அரிசியின் அளவை குறைத்து உணவு தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உணவு, அரிசி மற்றும் தேங்காய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் தாம் பாரிய பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்டத்தின் பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சலுகை விலையில் அரிசி மற்றும் தேங்காயைப் பெற்றுக்கொள்ளும் முகவர் இல்லை எனவும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்கள் : கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெறமுடியாத நிலை மலையகத் தோட்டங்களின் உட்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தோட்ட கடைகளில் ஒரு கிலோ நாட்டு அரிசி 250 முதல் 260 ரூபா வரை இன்றும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.தாம் பெரும்பாலும் நாட்டு அரிசியையே பயன்படுத்துவதாகவும், தோட்ட உள்ளகக் கடைகளில் இருந்து 230 ரூபாவுக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டு சில்லறை விலையான நாட்டு அரிசியை வழங்குவதில்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அரிசியின் விலையேற்றம் காரணமாக ஏனைய நாட்களில் கிடைக்கும் அரிசியின் அளவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அரிசியின் அளவை குறைத்து உணவு தயாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். உணவு, அரிசி மற்றும் தேங்காய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் தாம் பாரிய பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்டத்தின் பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சலுகை விலையில் அரிசி மற்றும் தேங்காயைப் பெற்றுக்கொள்ளும் முகவர் இல்லை எனவும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.