• Jan 18 2025

மக்கள் மீண்டும் வரிசையில்; கோட்டாவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும்! – கடும் எச்சரிக்கை

Chithra / Dec 12th 2024, 12:57 pm
image

 

நாட்டில் தற்போது தேங்காய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது நாட்டில் மீண்டும் வரிசை உருவாகும் நிலைமை காணப்படுகிறது. மக்களை மீண்டும் வரிசையில் நிற்க வைத்தமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

அவர்களின் கொள்கைகளும், ஆலோசனை பெறாமல் எடுக்கப்பட்ட தீர்மானங்களுமே இதற்குக் காரணம். அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மக்கள் அல்லலுற்று வருகின்றனர்.

தற்போது அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கம் கூறிய நிர்ணய விலையை ஏற்க முடியாதென்று கூறிவிட்டனர். இதனால் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை வழங்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை தொடருமாயின் கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படுமென சசிகுமார் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மக்கள் மீண்டும் வரிசையில்; கோட்டாவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படும் – கடும் எச்சரிக்கை  நாட்டில் தற்போது தேங்காய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தற்போது நாட்டில் மீண்டும் வரிசை உருவாகும் நிலைமை காணப்படுகிறது. மக்களை மீண்டும் வரிசையில் நிற்க வைத்தமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்அவர்களின் கொள்கைகளும், ஆலோசனை பெறாமல் எடுக்கப்பட்ட தீர்மானங்களுமே இதற்குக் காரணம். அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மக்கள் அல்லலுற்று வருகின்றனர்.தற்போது அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கம் கூறிய நிர்ணய விலையை ஏற்க முடியாதென்று கூறிவிட்டனர். இதனால் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை வழங்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.இவ்வாறானதொரு நிலைமை தொடருமாயின் கோட்டாபயவின் நிலையே அநுரவுக்கும் ஏற்படுமென சசிகுமார் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement