• Apr 03 2025

தோட்டத் தொழிலாளர் வேதன உயர்வை வலியுறுத்தி வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்..!

Chithra / Jul 26th 2024, 10:14 am
image

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. 

இந்தப் போராட்டம் ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இந்தப் போராட்டமானது முழுமையாக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களுடைய வேதன உயர்வைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும். 

இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். 

அதேநேரம் எமது ஒற்றுமையையும் பெருந்தோட்ட நிறுவனங்கள் புரிந்து கொள்ள வழி செய்யும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர் வேதன உயர்வை வலியுறுத்தி வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தப் போராட்டம் ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இந்தப் போராட்டமானது முழுமையாக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களுடைய வேதன உயர்வைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். அதேநேரம் எமது ஒற்றுமையையும் பெருந்தோட்ட நிறுவனங்கள் புரிந்து கொள்ள வழி செய்யும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத் தலைவர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement