• Jan 04 2025

பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம்..! பாடல் பாடி மரியாதை செய்த குடும்பத்தினர்..!

Tamil nila / Jan 27th 2024, 8:37 pm
image

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார்.

அவரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.

தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம். பாடல் பாடி மரியாதை செய்த குடும்பத்தினர். இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார்.அவரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.பின்னர் பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement