• Sep 23 2024

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். - செல்வம் எம்.பி!!samugammedia

Tamil nila / Sep 9th 2023, 6:32 pm
image

Advertisement

தமிழ் இன படுகொலை தொடர்பாக  குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

இன்று வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 04 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினால் இவ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர். 

நாங்களும்  இது தொடர்பாக  சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை   கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். 

மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபவருளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன்  மனித உரிமை மீறல்கள்ளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஐநா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர். 

மேலும் இவ் விடயம் தொடர்பாக கடந்த காலங்களிலே சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையை சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். 

கர்தினால் உட்பட அனைவரும் மனச்சாட்சியுடன் இந்நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மகிந்த ராஜபக்சவின் குடும்பம் மேற்கொண்ட அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்களிற்கு எதிராக  குரல்கொடுத்திருந்திருக்கலாம் என தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். - செல்வம் எம்.பிsamugammedia தமிழ் இன படுகொலை தொடர்பாக  குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 04 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினால் இவ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர். நாங்களும்  இது தொடர்பாக  சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை   கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபவருளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன்  மனித உரிமை மீறல்கள்ளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஐநா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர். மேலும் இவ் விடயம் தொடர்பாக கடந்த காலங்களிலே சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையை சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். கர்தினால் உட்பட அனைவரும் மனச்சாட்சியுடன் இந்நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மகிந்த ராஜபக்சவின் குடும்பம் மேற்கொண்ட அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்களிற்கு எதிராக  குரல்கொடுத்திருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement