அரசாங்க சேவையில் வேலைவாய்ப்பு உரிமைகள் தொடர்பான நெருக்கடித் தீர்வு மற்றும் அதனை தடுக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்முறைக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் திருமதி. ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை இன்று (01) டெம்பிள் ஹவுஸில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்றதற்காக பிரதமருக்கு தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
நெருக்கடிகளைத் தீர்ப்பது மட்டுமன்றி, முத்தரப்பு உரையாடல் முறை மூலம் எதிர்கால மோதல்களைத் தடுக்கும் உத்தேச பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு தங்களது முழு ஆதரவையும் அவர்கள் பிரதமரிடம் உறுதியளித்தனர். தொழிலாளர்கள் மீது கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிலாளர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்த குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து ILO தூதுக்குழுவிடம் பிரதமர் விளக்கினார்.
பணியாளர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல அரசு ஆர்வமாக உள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், திறன் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள பல பயிற்சி திட்டங்களை விளக்கினார். வேலைகளின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதே மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான உறுதியான வழி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஒழுங்குமுறைகளை தொழிலாளர் படையில் இணைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் மனித கண்ணியம் போன்ற நிலைமைகளின் கீழ் உற்பத்தித் தொழிலைக் காண வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவை வழங்குவதாக ILO பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க சேவை உரிமைகள் தொடர்பான நெருக்கடிகளுக்கு எடுக்கும் தீர்வுகளுக்கு ஆதரவு வழங்குங்கள் - பிரதமர் வேண்டுகோள். அரசாங்க சேவையில் வேலைவாய்ப்பு உரிமைகள் தொடர்பான நெருக்கடித் தீர்வு மற்றும் அதனை தடுக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்முறைக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் திருமதி. ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை இன்று (01) டெம்பிள் ஹவுஸில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.இது தொடர்பாக எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்றதற்காக பிரதமருக்கு தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். நெருக்கடிகளைத் தீர்ப்பது மட்டுமன்றி, முத்தரப்பு உரையாடல் முறை மூலம் எதிர்கால மோதல்களைத் தடுக்கும் உத்தேச பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு தங்களது முழு ஆதரவையும் அவர்கள் பிரதமரிடம் உறுதியளித்தனர். தொழிலாளர்கள் மீது கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிலாளர்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்த குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து ILO தூதுக்குழுவிடம் பிரதமர் விளக்கினார்.பணியாளர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல அரசு ஆர்வமாக உள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், திறன் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள பல பயிற்சி திட்டங்களை விளக்கினார். வேலைகளின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதே மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான உறுதியான வழி என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இலங்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஒழுங்குமுறைகளை தொழிலாளர் படையில் இணைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் மனித கண்ணியம் போன்ற நிலைமைகளின் கீழ் உற்பத்தித் தொழிலைக் காண வாய்ப்புகளை வழங்கியுள்ளது.தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவை வழங்குவதாக ILO பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு அனுர திஸாநாயக்கவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.