பிரதமர் ஹரினி அமரசூரிய மாவிட்டபுரம் கோவிலுக்கு நேற்று விஜயம் செய்த போது பிரதமரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சப்பாத்து கால்களுடன் ஆலயத்திற்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இது மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் அதிகாலைவேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததிருந்தனர்.
இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகர்த்தா சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் ஒரளவு தளர்த்தப்பட்டது.
இதையடுத்து பிரதமரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சப்பாத்து கால்களுடன் ஆலயத்திற்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டமை பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்குள் காலணிகளுடன் நுழைந்த பிரதமரின் பாதுகாப்பு படையினர் பிரதமர் ஹரினி அமரசூரிய மாவிட்டபுரம் கோவிலுக்கு நேற்று விஜயம் செய்த போது பிரதமரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சப்பாத்து கால்களுடன் ஆலயத்திற்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.இது மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.இந்நிலையில் பிரதமர் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் அதிகாலைவேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததிருந்தனர்.இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகர்த்தா சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் ஒரளவு தளர்த்தப்பட்டது.இதையடுத்து பிரதமரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சப்பாத்து கால்களுடன் ஆலயத்திற்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டமை பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.