• Apr 22 2025

பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார தேர்தல் காரியாலயம் திறப்பு!

Chithra / Apr 20th 2025, 12:24 pm
image


கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார  தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவும், மக்கள் சந்திப்பும் நேற்றிரவு நல்லந்தழுவை பொஹர கடைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆரம்பகால அரசியல் செயற்பாடு, கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், விருதோடை வட்டாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விருதோடை வட்டார வேட்பாளர் எம்.என்.எம்.றினோஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார தேர்தல் பிரச்சார அலுவலகம் ஊர் மக்கள், உலமாக்கள், வேட்பாளர்கள் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், வேட்பாளர்களில் ஒருவருமான எஸ்.எச்.எம்.முஸம்மில், அரசியல் செயற்பாட்டாளர் ஸப்வான் ஸல்மான், பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர், சமூக செயற்பாட்டாளர் எம்.என்.எம்.றினோஸ், 

கடையாமோட்டை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சீ.எம்.நஸார் உட்பட உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள், பிரதேச மக்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.


பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார தேர்தல் காரியாலயம் திறப்பு கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார  தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவும், மக்கள் சந்திப்பும் நேற்றிரவு நல்லந்தழுவை பொஹர கடைக்கு அருகாமையில் இடம்பெற்றது.இதன்போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆரம்பகால அரசியல் செயற்பாடு, கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், விருதோடை வட்டாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விருதோடை வட்டார வேட்பாளர் எம்.என்.எம்.றினோஸ் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.இதன்போது, பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார தேர்தல் பிரச்சார அலுவலகம் ஊர் மக்கள், உலமாக்கள், வேட்பாளர்கள் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கற்பிட்டி முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், வேட்பாளர்களில் ஒருவருமான எஸ்.எச்.எம்.முஸம்மில், அரசியல் செயற்பாட்டாளர் ஸப்வான் ஸல்மான், பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் விருதோடை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர், சமூக செயற்பாட்டாளர் எம்.என்.எம்.றினோஸ், கடையாமோட்டை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சீ.எம்.நஸார் உட்பட உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள், பிரதேச மக்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement