முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எந்தவித மாற்றமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தற்போது அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது.
எனவே, அந்த குழுவினால் வழங்கப்படும் மதிப்பீட்டு முடிவுகளுக்கமைய, அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புக்காக நியமிக்கப்படும். அதிகாரிகளின் எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் எடுத்த நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எந்தவித மாற்றமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை.இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தற்போது அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது.எனவே, அந்த குழுவினால் வழங்கப்படும் மதிப்பீட்டு முடிவுகளுக்கமைய, அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புக்காக நியமிக்கப்படும். அதிகாரிகளின் எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.