• Nov 26 2024

முகங்களை மறைத்தவாறு யாழில் நடமாடும் சில நபர்கள்: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

Tamil nila / Jul 31st 2024, 9:34 pm
image

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பாக சிசிடிவி கண்காணிப்பு கமரா காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் அதில் உள்ள நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கமராக்களில் இருந்தே காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

குறித்த காணொளிகளில் துவிச்சக்கரவண்டிகளில் முகங்களை மறைத்தவாறு சில நபர்கள் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.



முகங்களை மறைத்தவாறு யாழில் நடமாடும் சில நபர்கள்: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பாக சிசிடிவி கண்காணிப்பு கமரா காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் அதில் உள்ள நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.அவ்வாறு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கமராக்களில் இருந்தே காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளிகளில் துவிச்சக்கரவண்டிகளில் முகங்களை மறைத்தவாறு சில நபர்கள் நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement