• Oct 30 2024

மிக மோசமான சாதனையை படைத்துள்ள இலங்கை அணி!

Tamil nila / Jul 31st 2024, 9:48 pm
image

Advertisement

இருபதுக்கு 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த அணியாக இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற 03 இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், இலங்கை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த பட்டியலில் 105 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை அணி முதலாவது இடத்திலும் 104 போட்டிகளில் தோல்வியடைந்து பங்களாதேஷ் இரண்டாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 101 போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஒரு காலத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இலங்கை அணி தற்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இறுதி இருபதுக்கு 20 போட்டியை இலகுவாக வெல்ல வாய்ப்பு இருந்த போதும், இறுதியில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இலங்கை மகளிர் அணி, இந்திய அணியை ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றுள்ள நிலையில், இலங்கை ஆடவர் அணியின் தற்போதைய நிலையை பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மிக மோசமான சாதனையை படைத்துள்ள இலங்கை அணி இருபதுக்கு 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த அணியாக இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.இந்திய அணிக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற 03 இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், இலங்கை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.இந்த பட்டியலில் 105 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை அணி முதலாவது இடத்திலும் 104 போட்டிகளில் தோல்வியடைந்து பங்களாதேஷ் இரண்டாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 101 போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.ஒரு காலத்தில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இலங்கை அணி தற்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற இறுதி இருபதுக்கு 20 போட்டியை இலகுவாக வெல்ல வாய்ப்பு இருந்த போதும், இறுதியில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.இலங்கை மகளிர் அணி, இந்திய அணியை ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றுள்ள நிலையில், இலங்கை ஆடவர் அணியின் தற்போதைய நிலையை பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement