• Sep 17 2024

16 வயது சிறுவனை காரில் கடத்திய பொலிஸ் சகோதரர்கள்; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Chithra / Aug 12th 2024, 11:59 am
image

Advertisement


பதினாறு வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட பணியகத்தில் ஹோமாகம பிரிவில் கடமையாற்றும் ஒருவரும் மீகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருமாக இரு கான்ஸ்டபிள்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய பல்லேகம பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன் காரில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

எம்பிலிப்பிட்டிய - நோனாகம வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்பாக குறித்த கார் கண்டுபிடிக்கபட்டதாகவும்,

குறித்த காரில் நான்கு பேரும் கடத்தப்பட்ட சிறுவனும் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 31 வயதுக்கு இடைப்பட்ட பரகடுவ மென்னரபிட்டிய மற்றும் பட்பேரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

16 வயது சிறுவனை காரில் கடத்திய பொலிஸ் சகோதரர்கள்; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை பதினாறு வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பொலிஸ் விசேட பணியகத்தில் ஹோமாகம பிரிவில் கடமையாற்றும் ஒருவரும் மீகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒருவருமாக இரு கான்ஸ்டபிள்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.எம்பிலிபிட்டிய பல்லேகம பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன் காரில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எம்பிலிப்பிட்டிய - நோனாகம வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்பாக குறித்த கார் கண்டுபிடிக்கபட்டதாகவும்,குறித்த காரில் நான்கு பேரும் கடத்தப்பட்ட சிறுவனும் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 31 வயதுக்கு இடைப்பட்ட பரகடுவ மென்னரபிட்டிய மற்றும் பட்பேரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement