• Apr 22 2026

அனுமதியின்றி மணல் ஏற்றிய நபர் - வழிமறியலில் தப்பிச்சென்ற வேளை மடக்கிப்பிடித்த பொலிஸார்!

shanu / Jun 26th 2025, 11:32 am
image

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற நபரொருவர் வழிமறியலில் தப்பித்துச் சென்ற வேளை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.  


பளை பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வந்த டிப்பரை நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக  சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்துள்ளனர். 


இதன்போது பொலிஸாரின் விதிமுறைகளை  மீறி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனத்தை மோதும் வகையில் டிப்பரை செலுத்தி தப்பிச்சென்ற வேளை அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.   


கைது செய்யப்பட்டவர் மீது  சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின்  விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமை, விபத்தை ஏற்படுத்தும் வகையில் செலுத்தியமை போன்ற வழக்குகள்  தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுமதியின்றி மணல் ஏற்றிய நபர் - வழிமறியலில் தப்பிச்சென்ற வேளை மடக்கிப்பிடித்த பொலிஸார் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற நபரொருவர் வழிமறியலில் தப்பித்துச் சென்ற வேளை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.  பளை பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வந்த டிப்பரை நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக  சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்துள்ளனர். இதன்போது பொலிஸாரின் விதிமுறைகளை  மீறி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனத்தை மோதும் வகையில் டிப்பரை செலுத்தி தப்பிச்சென்ற வேளை அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.   கைது செய்யப்பட்டவர் மீது  சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின்  விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமை, விபத்தை ஏற்படுத்தும் வகையில் செலுத்தியமை போன்ற வழக்குகள்  தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement