• Jun 26 2026

மணலுடன் தப்பியோடிய டிப்பர்களை விடாது துரத்திய பொலிஸ்! - யாழில் பரபரப்பு

Chithra / Jun 25th 2026, 12:34 pm
image


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை பொலிஸார் மறித்தபோது, இரண்டும் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.


இதையடுத்து பொலிஸார் துரத்திச் சென்ற நடவடிக்கையின் போது, டொல்பின் ரக வாகனம் ஒன்று பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அதனையும் மீறி தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையில் ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 


தப்பிச் சென்ற மற்றொரு டிப்பர் வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மணலுடன் தப்பியோடிய டிப்பர்களை விடாது துரத்திய பொலிஸ் - யாழில் பரபரப்பு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை பொலிஸார் மறித்தபோது, இரண்டும் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.இதையடுத்து பொலிஸார் துரத்திச் சென்ற நடவடிக்கையின் போது, டொல்பின் ரக வாகனம் ஒன்று பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதனையும் மீறி தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையில் ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற மற்றொரு டிப்பர் வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement