• Apr 01 2025

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல்! - ஒருவர் கைது

Chithra / Dec 19th 2024, 12:57 pm
image


ஹொரணையில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடைக்கப்பட்ட வெற்று மதுபான போத்தலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகம், தலை மற்றும் ஒரு கையில் காயங்களுக்கு உள்ளான அதிகாரி, ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் காயமடைந்த கான்ஸ்டபிள் நேற்று (18) இரவு பணி முடிந்து விடுதிக்கு வந்து மது அருந்திவிட்டு அங்குள்ள மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கான்ஸ்டபிளை உடைத்த மதுபான போத்தலால் சந்தேக நபர் தாக்கியுள்ளார்.

சந்தேக நபர் ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவும் உள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் - ஒருவர் கைது ஹொரணையில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடைக்கப்பட்ட வெற்று மதுபான போத்தலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முகம், தலை மற்றும் ஒரு கையில் காயங்களுக்கு உள்ளான அதிகாரி, ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் காயமடைந்த கான்ஸ்டபிள் நேற்று (18) இரவு பணி முடிந்து விடுதிக்கு வந்து மது அருந்திவிட்டு அங்குள்ள மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது கான்ஸ்டபிளை உடைத்த மதுபான போத்தலால் சந்தேக நபர் தாக்கியுள்ளார்.சந்தேக நபர் ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவும் உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement