• Apr 05 2025

கொழும்பில் குவிக்கப்பட்ட பெருந்தொகை பொலிஸார் - வீடுகளை சுற்றி விசேட சோதனை

Chithra / Apr 5th 2025, 8:35 am
image

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 35,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் நகரங்களில் மட்டும் சுமார் 6,000 மேலதிக அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், போக்குவரத்து விபத்துகளை தடுக்க கூடுதல் பொலிஸார் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் வரும்போது, ​​திருடர்களிடமிருந்து வீடுகளைப் பாதுகாக்கவும் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படும் தினசரி நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குவிக்கப்பட்ட பெருந்தொகை பொலிஸார் - வீடுகளை சுற்றி விசேட சோதனை  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக சுமார் 35,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.மேல் மாகாணத்தின் நகரங்களில் மட்டும் சுமார் 6,000 மேலதிக அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், போக்குவரத்து விபத்துகளை தடுக்க கூடுதல் பொலிஸார் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் வரும்போது, ​​திருடர்களிடமிருந்து வீடுகளைப் பாதுகாக்கவும் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இந்த நாட்களில் பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படும் தினசரி நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement