• Jan 11 2025

பொதுமக்கள் இனி உடனடியாக முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் - பொலிஸாரினால் புதிய APP அறிமுகம்

Chithra / Jan 2nd 2025, 7:39 am
image


போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் பதிவு செய்வதற்காக  'இ-டிராஃபிக்' என்ற கையடக்க தொலைபேசி செயலி காவல்துறையால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

க்ளீன் ஸ்ரீலங்கா - 2025 திட்டத்திற்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இந்த செயலியை இலகுவாகத் தரவிறக்கம் செய்ய முடியும்.

அந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை உடனடியாக முன்வைக்க 

முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இந்த கையடக்க தொலைபேசி செயலியைப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய 

நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 

நாளாந்தம் இடம்பெறும் வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குப் பொதுமக்களின் 

உதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இ-டிராஃபிக்' என்ற கையடக்க தொலைபேசி செயலி 

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் இனி உடனடியாக முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் - பொலிஸாரினால் புதிய APP அறிமுகம் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் பதிவு செய்வதற்காக  'இ-டிராஃபிக்' என்ற கையடக்க தொலைபேசி செயலி காவல்துறையால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. க்ளீன் ஸ்ரீலங்கா - 2025 திட்டத்திற்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இந்த செயலியை இலகுவாகத் தரவிறக்கம் செய்ய முடியும்.அந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை உடனடியாக முன்வைக்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கையடக்க தொலைபேசி செயலியைப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நாளாந்தம் இடம்பெறும் வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குப் பொதுமக்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இ-டிராஃபிக்' என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement