• Jun 28 2024

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம் - 10 பேர் சேர்ந்து தாக்கிய கொடூரம்

Chithra / Jun 24th 2024, 2:55 pm
image

Advertisement

 

பதுளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிகளில் சென்ற 10 பேரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் பதுளை பிரதேசத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில்,

சம்பவத்தின் போது இவர் தனது உறவினருடன் முச்சக்கரவண்டியில் வெலிகேமுல்ல பகுதிக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது, அப்பகுதிக்கு நான்கு முச்சக்கரவண்டிகளில் சென்ற 10 பேர் இவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம் - 10 பேர் சேர்ந்து தாக்கிய கொடூரம்  பதுளை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிகளில் சென்ற 10 பேரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் பதுளை பிரதேசத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில்,சம்பவத்தின் போது இவர் தனது உறவினருடன் முச்சக்கரவண்டியில் வெலிகேமுல்ல பகுதிக்கு நீராடச் சென்றுள்ளார்.இதன்போது, அப்பகுதிக்கு நான்கு முச்சக்கரவண்டிகளில் சென்ற 10 பேர் இவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement