• Apr 15 2026

பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு..! அதிகாலையில் பெரும் பதற்றம்

Chithra / Dec 31st 2023, 7:40 am
image

 

மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மற்றொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை மேற்கொண்டு  வேனொன்றில் தப்பிக்க முயற்சித்த தருணத்தில் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு. அதிகாலையில் பெரும் பதற்றம்  மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மற்றொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.குறித்த துப்பாக்கி சூடு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை மேற்கொண்டு  வேனொன்றில் தப்பிக்க முயற்சித்த தருணத்தில் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.இதன்போது பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement