• Apr 30 2024

தப்பியோடிய கைதிகள் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கைது செய்த பொலிசார்.

Tharun / Apr 16th 2024, 6:52 pm
image

Advertisement

யாழ் சிறைச்சலையில் இருந்து சாவகச்சேரி நீதிமன்றிற்கு வழக்கு ஒன்றிற்காக கொண்டு செல்லப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பியோடினர். ஆயினும்  சாவகச்சேரி பொலிசாரால் அவர்கள் 30 நிமிடத்திற்குள்  மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சுவாரசியமான சம்பவம் இன்று(16) காலை இடம்பெற்றது. 

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது

திருட்டுச் சம்பவத்தில் 1வருட சிறைத்தண்டனை பெற்ற கைதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியும்  சாவகச்சேரி நீதிமன்றில் அவர்களுக்கிருந்த பிறிதொரு வழக்கிற்காக இன்று(16)  காலை யாழ் சிறைச்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட போது தப்பியோடினர். விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிசார் 30 நிமிடத்திற்கு கைதிகளை மீண்டும் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றின்றில் முன்னிலைப்படுத்தினர். 

தப்பியோடிய குற்றத்திற்காக கைதிகளுக்கு 6 மாத சிறைத்தண்டணையும் 1500 அபராதமும் விதித்து தீர்ப்பனித்த  நீதாவான் ஏ.யூட்சன், தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

தப்பியோடிய கைதிகள் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கைது செய்த பொலிசார். யாழ் சிறைச்சலையில் இருந்து சாவகச்சேரி நீதிமன்றிற்கு வழக்கு ஒன்றிற்காக கொண்டு செல்லப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பியோடினர். ஆயினும்  சாவகச்சேரி பொலிசாரால் அவர்கள் 30 நிமிடத்திற்குள்  மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சுவாரசியமான சம்பவம் இன்று(16) காலை இடம்பெற்றது. இதுபற்றி மேலும் தெரியவருவதாவதுதிருட்டுச் சம்பவத்தில் 1வருட சிறைத்தண்டனை பெற்ற கைதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியும்  சாவகச்சேரி நீதிமன்றில் அவர்களுக்கிருந்த பிறிதொரு வழக்கிற்காக இன்று(16)  காலை யாழ் சிறைச்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட போது தப்பியோடினர். விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிசார் 30 நிமிடத்திற்கு கைதிகளை மீண்டும் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றின்றில் முன்னிலைப்படுத்தினர். தப்பியோடிய குற்றத்திற்காக கைதிகளுக்கு 6 மாத சிறைத்தண்டணையும் 1500 அபராதமும் விதித்து தீர்ப்பனித்த  நீதாவான் ஏ.யூட்சன், தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement