• May 12 2024

மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது..!

Chithra / Apr 28th 2024, 5:02 pm
image

Advertisement


ஹட்டன்  - கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர் .   

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்  தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் பல வருடங்கள் பணியாற்றியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலதிக வகுப்பு முடிவடைவதற்குத் தாமதமானதால்  தான் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றதாகவும்,

தான் அங்கு சென்ற போது ஆசிரியர் தன்னுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் பாடசாலை மாணவி பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


மாணவியை வீட்டுக்கு அழைத்த பிரபல பாடசாலை ஆசிரியர் கைது. ஹட்டன்  - கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்ததாகக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர் .   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்  தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் இந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் பல வருடங்கள் பணியாற்றியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக வகுப்பு முடிவடைவதற்குத் தாமதமானதால்  தான் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றதாகவும்,தான் அங்கு சென்ற போது ஆசிரியர் தன்னுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் பாடசாலை மாணவி பொலிஸாரிடம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார். பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement