அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மண் கடத்தல் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் பாதுகாப்பு காவலரணில் கடமைக்காக இருக்கின்ற பொலிஸார் இராணுவத்தினர் கைத்தொலைபேசி மோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த கடத்தல்களை தடுப்பதற்கு வழமை போன்று இராணுவத்தினர் கடற்படையினரின் வீதி ரோந்து நடவடிக்கை அவசியம் குறித்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேசமயம் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மண் கடத்தல் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.இவ்வாறான நிலையில் பாதுகாப்பு காவலரணில் கடமைக்காக இருக்கின்ற பொலிஸார் இராணுவத்தினர் கைத்தொலைபேசி மோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் குறித்த கடத்தல்களை தடுப்பதற்கு வழமை போன்று இராணுவத்தினர் கடற்படையினரின் வீதி ரோந்து நடவடிக்கை அவசியம் குறித்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.