• Apr 03 2025

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோ..! இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Chithra / May 12th 2024, 10:57 am
image

 

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.

இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இன்று, நாளை  மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களில் பாராசூட் ஜம்ப் ஷோ நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச பேஸ் ஜம்பர்களை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

பாராசூட் ஜம்பிங் ஷோ இன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

நாளை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.

கடைசி நாளான மே 14ம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை பார்வையிட மக்கள் வருகை தருமாறு தாமரை கோபுர நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றனர்.

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோ. இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு  தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி இன்று, நாளை  மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களில் பாராசூட் ஜம்ப் ஷோ நடைபெறவுள்ளது.இதில் சர்வதேச பேஸ் ஜம்பர்களை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.பாராசூட் ஜம்பிங் ஷோ இன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.நாளை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.கடைசி நாளான மே 14ம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.இந்த நிகழ்வை பார்வையிட மக்கள் வருகை தருமாறு தாமரை கோபுர நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement