நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நிலத்தடியிலிருந்து வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விலகியிருப்பதோடு, தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் வெள்ளம், நிலச்சரிவு என முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளது. அனர்த்த நிலமையால், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.
அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைத்தொடர்பு சேவையை மீட்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் கோரிக்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நிலத்தடியிலிருந்து வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விலகியிருப்பதோடு, தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் வெள்ளம், நிலச்சரிவு என முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளது. அனர்த்த நிலமையால், பல பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.