• Jul 22 2025

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு; முக்கிய பொருட்களுடன் கைதான சந்தேக நபர்..!

Sharmi / May 27th 2025, 1:24 pm
image

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஹீனடியன்கல பிரதேசத்தில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 91 போதை மாத்திரைகளும், வாள் ஒன்றும் , 5650 ரூபா பணமும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு; முக்கிய பொருட்களுடன் கைதான சந்தேக நபர். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஹீனடியன்கல பிரதேசத்தில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபரிடமிருந்து 91 போதை மாத்திரைகளும், வாள் ஒன்றும் , 5650 ரூபா பணமும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now