• Nov 23 2024

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Jan 31st 2024, 2:37 pm
image

நுவரெலியா - ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்கு வழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா- ஹட்டன் குறுக்கு வழியில் வீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை அந்த வீதியில் பொலிஸார் இல்லாத வேளையில் ​​கனரக வாகனங்களை ரகசியமாக பயன்படுத்தும்போது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தது.

இது தொடர்பில் நானுஓயா பொலிஸாரிடம் வினவிய போது, ​​

பொலிஸாரைப் பொருட்படுத்தாமல், அங்கு பொருத்தப்பட்டுள்ள பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டால், சாரதியை வாகனத்துடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என தெரிவித்தனர்.

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை.samugammedia நுவரெலியா - ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்கு வழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா- ஹட்டன் குறுக்கு வழியில் வீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இதேவேளை அந்த வீதியில் பொலிஸார் இல்லாத வேளையில் ​​கனரக வாகனங்களை ரகசியமாக பயன்படுத்தும்போது பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தது.இது தொடர்பில் நானுஓயா பொலிஸாரிடம் வினவிய போது, ​​பொலிஸாரைப் பொருட்படுத்தாமல், அங்கு பொருத்தப்பட்டுள்ள பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக தொடர்ந்தும் செயற்பட்டால், சாரதியை வாகனத்துடன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement