• Nov 24 2024

பொலிஸாரின் 'யுக்திய' வேட்டை தொடரும்...! ஐ.நாவின் எதிர்ப்புக்கு அஞ்சப்போவதில்லை...!அரசாங்கம் திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 9:06 am
image

நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நாள்தோறும்  ஆயிரக்கணக்காணோர் கைதுசெய்யப்பட்டு வருவதுடன் ஏராளமான போதைப் பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இவ்வாறானதொரு நிலையில் யுக்திய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.


குறிப்பாக 'யுக்திய' சோதனை நட­வ­டிக்­கை­களின் போது பொதுமக்­களின் மனித உரி­மைகள் பாரிய அளவில் மீறப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.


 இவ்வாறானதொரு நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்ல யார் என்ன சொன்னாலும் யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படமாட்டாது எனவும் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கைக்கு  எதிராக தேசிய ரீதியிலும்இசர்வதேச மட்டத்திலும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இலங்கையில் உள்ள சிறு குழுவொன்று இதற்கு எதிராக சர்வதேசத்துக்கு எழுதுகின்றது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவைக்கூட எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் ஊடகங்கள் என்னிடம் வினவின. இதன்போது யார் என்ன சொன்னாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படாது, யுக்திய நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.














பொலிஸாரின் 'யுக்திய' வேட்டை தொடரும். ஐ.நாவின் எதிர்ப்புக்கு அஞ்சப்போவதில்லை.அரசாங்கம் திட்டவட்டம்.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நாள்தோறும்  ஆயிரக்கணக்காணோர் கைதுசெய்யப்பட்டு வருவதுடன் ஏராளமான போதைப் பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் யுக்திய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.குறிப்பாக 'யுக்திய' சோதனை நட­வ­டிக்­கை­களின் போது பொதுமக்­களின் மனித உரி­மைகள் பாரிய அளவில் மீறப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவ்வாறானதொரு நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்ல யார் என்ன சொன்னாலும் யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படமாட்டாது எனவும் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கைக்கு  எதிராக தேசிய ரீதியிலும்இசர்வதேச மட்டத்திலும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இலங்கையில் உள்ள சிறு குழுவொன்று இதற்கு எதிராக சர்வதேசத்துக்கு எழுதுகின்றது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவைக்கூட எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் ஊடகங்கள் என்னிடம் வினவின. இதன்போது யார் என்ன சொன்னாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படாது, யுக்திய நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement