• Nov 26 2024

பொலிஸாரின்'யுக்திய நடவடிக்கை' 868 சந்தேக நபர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 30th 2024, 10:16 am
image

நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் 'யுக்திய'  நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 332 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 868 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 120 கிராம் ஹெராயின், 98 கிராம் பனி, 123 கிலோ 600 கிராம் கஞ்சா 9,708 கஞ்சா செடிகள், மாவா 249 கிராம், மதனமோதக 137 கிராம் 31,611 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு 05 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 27 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 332 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில், 36 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 279 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 08 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின்'யுக்திய நடவடிக்கை' 868 சந்தேக நபர்கள் கைது.samugammedia நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் 'யுக்திய'  நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 332 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 868 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 120 கிராம் ஹெராயின், 98 கிராம் பனி, 123 கிலோ 600 கிராம் கஞ்சா 9,708 கஞ்சா செடிகள், மாவா 249 கிராம், மதனமோதக 137 கிராம் 31,611 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.அதேவேளை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 536 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு 05 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 27 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட 332 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில், 36 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 279 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 08 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement