• Dec 13 2024

அரசியல் பிழைத்தோர் புறக்கணிக்கப்படுவர் - பரப்புரையில் சிறீதரன் சுட்டிக்காட்டு!

Tamil nila / Nov 11th 2024, 7:20 pm
image

"தேர்தல் வெற்றிக்காக மிகக் கீழ்த்தரமான செயல்களை முன்னெடுக்கும் அரசியல் பிழைத்தோர்க்குக் காலமும் இயற்கையும் அறத்தின் பாற்பட்ட விளைவுகளை மீளளிக்கும்போது, அத்தகையவர்கள் மக்கள் மனங்களிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அவரை ஆதரித்து கிளிநொச்சி பாரதிபுரம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தத்தமது தனிமனித நலன்களை முன்னிறுத்தியும், தனிப்பட்ட வெற்றி ஒன்றே நோக்கம் எனவும் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் சிலர், தனிமனிதர்கள் மீதான சேறுபூசல்களையும், அவதூறு பரப்பலையுமே தமது இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

அரசியலை வாழ்வாக வரித்துக் கொண்டவர்களின் சிந்தனையும் செயல்நோக்கும் அறவழிப்பட்டதாகவும், மக்கள் விரோதமற்றதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அறம்சார் அரசியலை முன்னெடுப்பவர்களால் மட்டுமே மக்கள் மத்தியில் நிலைபெற முடியும்." - என்றார்.



அரசியல் பிழைத்தோர் புறக்கணிக்கப்படுவர் - பரப்புரையில் சிறீதரன் சுட்டிக்காட்டு "தேர்தல் வெற்றிக்காக மிகக் கீழ்த்தரமான செயல்களை முன்னெடுக்கும் அரசியல் பிழைத்தோர்க்குக் காலமும் இயற்கையும் அறத்தின் பாற்பட்ட விளைவுகளை மீளளிக்கும்போது, அத்தகையவர்கள் மக்கள் மனங்களிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.அவரை ஆதரித்து கிளிநொச்சி பாரதிபுரம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தத்தமது தனிமனித நலன்களை முன்னிறுத்தியும், தனிப்பட்ட வெற்றி ஒன்றே நோக்கம் எனவும் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் சிலர், தனிமனிதர்கள் மீதான சேறுபூசல்களையும், அவதூறு பரப்பலையுமே தமது இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.அரசியலை வாழ்வாக வரித்துக் கொண்டவர்களின் சிந்தனையும் செயல்நோக்கும் அறவழிப்பட்டதாகவும், மக்கள் விரோதமற்றதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அறம்சார் அரசியலை முன்னெடுப்பவர்களால் மட்டுமே மக்கள் மத்தியில் நிலைபெற முடியும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement