• Nov 13 2024

ஜேவிபியின் ஆட்சியிலும் பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது - சுகாஷ் சீற்றம்!

Tamil nila / Nov 11th 2024, 7:10 pm
image

ஜேவிபியின் ஆட்சியிலும் பொலிஸாரின் திட்டமிட்ட அராஜகங்கள் தொடர்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை எமுது ஆதரவாளர்கள் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகி கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பொலிசார் சட்டத்தை மீறி எமது இரண்டு ஆதரவாளர்களை கைது செய்து, எமது துண்டு பிரசுரங்களையும் பறித்து, அவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டிருந்தார்கள்.

உடனடியாக அந்த தகவல் எனக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நான் அந்த இடத்துக்கு சென்று இருந்தேன். அங்கு ஜேவிபி கட்சியினர், ஈ.பி.டி.பி கட்சியினர் மற்றும் பல கட்சிகள் துண்டு பிரசுரங்களை பகிரங்கமாக விநியோகித்துக் கொண்டிருந்த போதும் அவர்களை கைது செய்யாத பொலிசார் எமது ஆதரவாளர்களை மாத்திரம் கைது செய்து துண்டு பிரசுரங்களை அபகரித்து இருந்தார்கள்.

இதை நான் மிக வன்மையாக கண்டித்து அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கதைத்து விட்டு, பொறுப்பதிகாரியுடன் என்னையும் கதைக்க வைத்தார்கள் என்னையும் கதைக்க வைத்தார்கள்.

நான் கதைத்த போது அவரும், துண்டுப் பிரசுரங்களை அவ்வாறு விநியோகம் செய்ய முடியாது என்று கூறினார். நான் மிகக் காட்டமாக, இன்று இறுதி நாள் பிரச்சாரம். இன்று இரவு 12 மணிவரை நாங்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு உரித்து இருக்கிறது என்று தெரிவித்ததையடுத்து அவர் அமைதியாகினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரத்தை திட்டமிட்டு குலைப்பதற்கு அரச அதிகாரத்தோடு பொலிசார் செய்யப்படுகிறார்கள். ஜேவிபியினுடைய ஆட்சியிலும் பொலிசாருடைய காட்டுமிராண்டித்தனமும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் குறைவடையவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகிறது. எத்தகைய சவால்கள் வந்தாலும் நாங்கள் எதிர்நீச்சல் போட்டு நிச்சயமாக வெற்றி பெருவோம் என்றார்.


ஜேவிபியின் ஆட்சியிலும் பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது - சுகாஷ் சீற்றம் ஜேவிபியின் ஆட்சியிலும் பொலிஸாரின் திட்டமிட்ட அராஜகங்கள் தொடர்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எமுது ஆதரவாளர்கள் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகி கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பொலிசார் சட்டத்தை மீறி எமது இரண்டு ஆதரவாளர்களை கைது செய்து, எமது துண்டு பிரசுரங்களையும் பறித்து, அவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டிருந்தார்கள்.உடனடியாக அந்த தகவல் எனக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நான் அந்த இடத்துக்கு சென்று இருந்தேன். அங்கு ஜேவிபி கட்சியினர், ஈ.பி.டி.பி கட்சியினர் மற்றும் பல கட்சிகள் துண்டு பிரசுரங்களை பகிரங்கமாக விநியோகித்துக் கொண்டிருந்த போதும் அவர்களை கைது செய்யாத பொலிசார் எமது ஆதரவாளர்களை மாத்திரம் கைது செய்து துண்டு பிரசுரங்களை அபகரித்து இருந்தார்கள்.இதை நான் மிக வன்மையாக கண்டித்து அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கதைத்து விட்டு, பொறுப்பதிகாரியுடன் என்னையும் கதைக்க வைத்தார்கள் என்னையும் கதைக்க வைத்தார்கள்.நான் கதைத்த போது அவரும், துண்டுப் பிரசுரங்களை அவ்வாறு விநியோகம் செய்ய முடியாது என்று கூறினார். நான் மிகக் காட்டமாக, இன்று இறுதி நாள் பிரச்சாரம். இன்று இரவு 12 மணிவரை நாங்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு உரித்து இருக்கிறது என்று தெரிவித்ததையடுத்து அவர் அமைதியாகினார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரத்தை திட்டமிட்டு குலைப்பதற்கு அரச அதிகாரத்தோடு பொலிசார் செய்யப்படுகிறார்கள். ஜேவிபியினுடைய ஆட்சியிலும் பொலிசாருடைய காட்டுமிராண்டித்தனமும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் குறைவடையவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகிறது. எத்தகைய சவால்கள் வந்தாலும் நாங்கள் எதிர்நீச்சல் போட்டு நிச்சயமாக வெற்றி பெருவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement