• Jun 19 2025

பாலர் பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகள் - நீக்குமாறு கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை!

shanuja / Jun 19th 2025, 12:38 pm
image

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முகாமைத்துவத்திலுள்ள அரசியல்வாதிகளை நீ்க்கி கல்வி சார்ந்த அதிகாரிகளை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். 


கிழக்கு மாகாண ஆளுநருக்கு  இது தொடர்பில் இன்று (19)  கடிதமொன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய கடிதத்தில் உள்ளதாவது,  


கிழக்கு மாகாண பாலர் பாடசாலை சட்டத்தின்படி இப்பணியகத்திற்கு முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாகாண அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுநரினால் இந்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். 


பாலர் பாடசாலை பணியகத்தின் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இப்போது பிரதேச சபையொன்றின் தவிசாளராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. கல்வி நிர்வாகத்தில் நேரடி அரசியல் தொடர்பு உள்ளவர்கள் இருப்பது பொருத்தமானதல்ல என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். 


அதேபோல கல்வித்துறை தொடர்பில்லாதவர்கள் இப்பணியகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் சரியான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பாலர் பாடசாலை ஆசிரியைகளும், உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  


கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைகள் தான் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலக் கல்வியை நிர்ணயிப்பவை. எங்களை விட கல்விப் பாண்டித்தியமும், கல்வி நிர்வாகத் திறனும் கொண்ட தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.


எனவே, கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை மாணவர்களின் உயரிய நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பாடசாலை பணியக முகாமைத்துவக் குழுவை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.- என்றுள்ளது.

பாலர் பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகள் - நீக்குமாறு கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் முகாமைத்துவத்திலுள்ள அரசியல்வாதிகளை நீ்க்கி கல்வி சார்ந்த அதிகாரிகளை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கு  இது தொடர்பில் இன்று (19)  கடிதமொன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய கடிதத்தில் உள்ளதாவது,  கிழக்கு மாகாண பாலர் பாடசாலை சட்டத்தின்படி இப்பணியகத்திற்கு முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாகாண அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுநரினால் இந்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். பாலர் பாடசாலை பணியகத்தின் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இப்போது பிரதேச சபையொன்றின் தவிசாளராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. கல்வி நிர்வாகத்தில் நேரடி அரசியல் தொடர்பு உள்ளவர்கள் இருப்பது பொருத்தமானதல்ல என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். அதேபோல கல்வித்துறை தொடர்பில்லாதவர்கள் இப்பணியகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் சரியான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பாலர் பாடசாலை ஆசிரியைகளும், உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைகள் தான் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலக் கல்வியை நிர்ணயிப்பவை. எங்களை விட கல்விப் பாண்டித்தியமும், கல்வி நிர்வாகத் திறனும் கொண்ட தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.எனவே, கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை மாணவர்களின் உயரிய நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பாடசாலை பணியக முகாமைத்துவக் குழுவை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement