• Jan 19 2025

அரசியல் என்பது இரத்தம் சிந்தாத ஒரு போராட்டம் - எஸ். செந்தூரன்

Tharmini / Dec 12th 2024, 3:26 pm
image

தாயக தமிழர்பேரவை தலைமை ஒருங்கமைப்பாளர். எஸ்.செந்தூரன் முல்லைத்தீவு  ஊடக அமையத்தில் 10.12.2024 அன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

அவலம் சுமந்த மண்ணில் இருந்து போர் காலத்திற்கு பின்னர் உருவாக்கம் பெறும் கட்டமைப்பாக தாயக தமிழர் பேரவை அமைப்பு உலக மனிதஉரிமைகள் நாள் அன்று வெளியீடு செய்வதில் பெருமை கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் பூர்வீகமாக பரந்து வாழ்கின்ற பிராந்தியங்கள் எங்கும் வாழ்கின்ற தமிழ்மக்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல், வாழ்வியல், கலைகலாசாரம் போன்ற பல்வேறு துறைகளில் பின்னடைவுகளை எதிர்கால ஆபத்து நிலமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் என்பது தேர்தலில் நிக்கும் அரசில் அரசியல் அல்ல போராட்டம் என்பது இரத்தம் சிந்துகின்ற அரசியல் அரசியல் என்பது இரத்தம் சிந்தாத ஒரு போராட்டம்.

இந்த இரத்தம் சிந்தார போராட்டத்தில் எங்கள் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பக்கங்களில் அடிபட்டு விட்டார்கள்.

எதிர்காலத்தில் எங்கள் சந்திகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தவேண்டும் என்பதற்காக தாயக தமிழர் பேரவையின் உருவாக்கம் அமைந்துள்ளது.

அரசியலில் பலவகை அரசியல் இருக்கின்றது உணர்ச்சி அரசியல்,இணக்க அரசியல் ,எதிர்ப்பு அரசியில்,சரணாகதி அரசியல் இவ்வாறு உலக அரங்கில் பல உள்ளன.

ஆனால் இன்று தமிழர்கள் செய்வது சரணாகதி நிலையான வங்குறோத்து அரசியல் இந்த நிலமையில் இலங்கையில் தாயக தமிழர் பிராந்தியங்களில் இருந்து மக்களின் குரலாக மக்களின் சகல அபிலாசைகளையும் வெளிப்படுத்தப்போகும் சேவையினை தாயக தமிழர் பேரவை மேற்கொள்ளும் வெறும் தேர்தல் அரசியல் மட்டும் அரசியலாகாது தாயகத்தமிழர் பேரவையானது தமிழர்களின் அரசியல்,பொருளாதாரம் ,கல்வி,கலை கலாச்சாரம் ஆகியவற்றுக்கான ஏக கட்டமைப்பாக நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.

முல்லைத்தீவில் ஏன் நாங்கள் அறிமுகத்தினை விடுகின்றோம் என்று சொன்னால் முல்லைத்தீவு என்பது தமிழர்களின் அடையாளம் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு முடிந்த இடமாக இருக்கலாம் அல்லது 30 ஆண்டுகால ஈழவிடுதலைபோராட்டம் முற்றுப்பெற்ற இடமாக இருக்கலாம் வடக்கில் பரந்த மாவட்டமாக காணப்படுகின்றது

 எல்லோரின் பேசுபொருளாக இருக்கின்ற மாவட்டம்,முள்ளிவாய்க்கால் என்பது எல்லோரின் வாயில் அகப்பட்ட அவல்கடலை போல தங்களின் அரசியலுக்காக சுயநலத்திற்காக பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் தனித்துவமான யாருடைய பின்புலமும் இல்லாத இளைஞர்களின் கட்டமைப்பாக தாயக தமிழர் பேரவை கட்டமைப்பு தோற்றம் பெறுகின்றது. இது அரசியல் கட்டமைப்பும் கிடையாகது.

இந்த நிலையில் தாயக தமிழர் போரவையின் கொள்கை பிரடனமும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

 17 கொள்கைள் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அரசியல் தொடர்பில் மக்களுக்கு சரியான குழப்பம் இருக்கின்றது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களை குழப்பி விட்டார்கள். மக்களுக்கு என்று சொல்லி எந்த நாதியும் இல்லை என்ன நடக்கப்போகின்றது என்று மக்களுக்கு தெரியாது இங்கு சுதந்திரம் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் சுயமாக சிந்திக்கமுடியாத மக்களாக இந்த அரசியல் காலம் உருவாக்கி  இருக்கின்றது.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக போர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்தேசியக்கூட்மைப்பு இருந்தது பல கட்சிகள் இணைந்துதான் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது விடுதலைப்புலிகளின் தலையீட்டுடன் தான் உருவாக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும், அன்று இருந்த  22 பாராளுமன்ற உறுப்பினகள் போர் நடைபெற்றபோது என்ன செய்தார்கள்? அவர்கள் ஒன்றும் சரியாக செய்யவில்லை.

இன்று அரசாங்கம் பிளைவிட்டதாக கூவி தங்கள் அரசியலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினை 30 ஆண்டுகால போரின் பின்னர் மக்கள் நம்பினார்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக அதிகளவான வாக்குகளுடன் இருந்தார்கள் அவர்கள் வங்குறோத்து அரசியலை செய்தார்கள் இன்று தமிழர் தரப்பின் பின்னடைவிற்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு முக்கியமான காரணம், இன்று எல்லா கட்சிகளும் உடைந்து சென்று தமிழரசு கட்சி மட்டும் நிக்கின்றது.

தமிழரசு கட்சி மட்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கிடையாது அனைத்து கட்சிகளும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

சரிபிழைகளுக்கு அப்பால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக பேரம்பேசும் நிலைக்கு அவர்கள் அன்று இருந்தார்கள்.

தமிழரசு கட்சி மட்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இல்லை அது தந்தை செல்வாவின் கட்சி இன்று எல்லாம் மாறிப்போய்விட்டது.

கடந்த தேர்தலினை பார்தீர்கள் என்றால் தென்னிலங்கை கட்சி முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களையும் வன்னியில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது. வாக்கு சிதைவுகள்தான் இங்கு நடைபெற்றுள்ளது.

பாராளுமன்றம் என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் பாராளுமன்றம் என்பது பிரதேச சபைபோல் எங்கள் பிரச்சினைகளை கதைக்கும் இடம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்  பாராளுமன்றம் என்பது இலங்கையின் உயர்ந்த சபை சட்டம் இயற்றுகின்ற சபை நீதிமன்றத்திற்கு வரும் சட்டங்கள் அனைத்தும் இயற்றப்படும் சபைதான் பாராளுமன்றம் அது மிகவும் அறிவார்த்தமான சபை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமூலத்தினை பாராளுமன்றம் கொண்டுசெல்லும் திறமை உண்டு அங்கு கொண்டு.

 சிங்கள மக்களையம் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும் எங்கள் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு அதிகமாக விளங்கப்படுத்தவேண்டும் நாங்கள் இந்த மண்ணினை அதிகமாக நேசித்தவர்கள் தமிழ்மக்கள் இந்த மண்ணினை நேசிக்கின்றார்கள்

பொருளாதாரம் கீழான நிலையில் இலங்கை இருக்கின்றது இதனை மீட்கும் நிலை தமிழர்களிடம் தான் இருக்கின்றது ஆனால் அந்த கட்டமைப்பு உருவாக்கக்கூடிய இடத்தில் எங்களின் அரசியல் நிலமை இல்லை தேர்தல் அரசியல் நோக்கி தனிப்பட்ட பதவிவெறிகளில்தான் இருக்கின்றார்கள்.

சட்டம் இயற்றக்கூடிய சபைக்கு என்னென்று கதைக்கத்தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்கின்றார்கள்.

இன்று பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது அதனை நீக்குவதற்கான என்ன உத்திகள் எடுத்துள்ளார்கள் எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் என்பது இரத்தம் சிந்தாத ஒரு போராட்டம் - எஸ். செந்தூரன் தாயக தமிழர்பேரவை தலைமை ஒருங்கமைப்பாளர். எஸ்.செந்தூரன் முல்லைத்தீவு  ஊடக அமையத்தில் 10.12.2024 அன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவலம் சுமந்த மண்ணில் இருந்து போர் காலத்திற்கு பின்னர் உருவாக்கம் பெறும் கட்டமைப்பாக தாயக தமிழர் பேரவை அமைப்பு உலக மனிதஉரிமைகள் நாள் அன்று வெளியீடு செய்வதில் பெருமை கொள்கின்றோம்.வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் பூர்வீகமாக பரந்து வாழ்கின்ற பிராந்தியங்கள் எங்கும் வாழ்கின்ற தமிழ்மக்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல், வாழ்வியல், கலைகலாசாரம் போன்ற பல்வேறு துறைகளில் பின்னடைவுகளை எதிர்கால ஆபத்து நிலமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.அரசியல் என்பது தேர்தலில் நிக்கும் அரசில் அரசியல் அல்ல போராட்டம் என்பது இரத்தம் சிந்துகின்ற அரசியல் அரசியல் என்பது இரத்தம் சிந்தாத ஒரு போராட்டம்.இந்த இரத்தம் சிந்தார போராட்டத்தில் எங்கள் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பக்கங்களில் அடிபட்டு விட்டார்கள்.எதிர்காலத்தில் எங்கள் சந்திகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தவேண்டும் என்பதற்காக தாயக தமிழர் பேரவையின் உருவாக்கம் அமைந்துள்ளது.அரசியலில் பலவகை அரசியல் இருக்கின்றது உணர்ச்சி அரசியல்,இணக்க அரசியல் ,எதிர்ப்பு அரசியில்,சரணாகதி அரசியல் இவ்வாறு உலக அரங்கில் பல உள்ளன.ஆனால் இன்று தமிழர்கள் செய்வது சரணாகதி நிலையான வங்குறோத்து அரசியல் இந்த நிலமையில் இலங்கையில் தாயக தமிழர் பிராந்தியங்களில் இருந்து மக்களின் குரலாக மக்களின் சகல அபிலாசைகளையும் வெளிப்படுத்தப்போகும் சேவையினை தாயக தமிழர் பேரவை மேற்கொள்ளும் வெறும் தேர்தல் அரசியல் மட்டும் அரசியலாகாது தாயகத்தமிழர் பேரவையானது தமிழர்களின் அரசியல்,பொருளாதாரம் ,கல்வி,கலை கலாச்சாரம் ஆகியவற்றுக்கான ஏக கட்டமைப்பாக நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்.முல்லைத்தீவில் ஏன் நாங்கள் அறிமுகத்தினை விடுகின்றோம் என்று சொன்னால் முல்லைத்தீவு என்பது தமிழர்களின் அடையாளம் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு முடிந்த இடமாக இருக்கலாம் அல்லது 30 ஆண்டுகால ஈழவிடுதலைபோராட்டம் முற்றுப்பெற்ற இடமாக இருக்கலாம் வடக்கில் பரந்த மாவட்டமாக காணப்படுகின்றது எல்லோரின் பேசுபொருளாக இருக்கின்ற மாவட்டம்,முள்ளிவாய்க்கால் என்பது எல்லோரின் வாயில் அகப்பட்ட அவல்கடலை போல தங்களின் அரசியலுக்காக சுயநலத்திற்காக பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலையில் தனித்துவமான யாருடைய பின்புலமும் இல்லாத இளைஞர்களின் கட்டமைப்பாக தாயக தமிழர் பேரவை கட்டமைப்பு தோற்றம் பெறுகின்றது. இது அரசியல் கட்டமைப்பும் கிடையாகது.இந்த நிலையில் தாயக தமிழர் போரவையின் கொள்கை பிரடனமும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 17 கொள்கைள் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று அரசியல் தொடர்பில் மக்களுக்கு சரியான குழப்பம் இருக்கின்றது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களை குழப்பி விட்டார்கள். மக்களுக்கு என்று சொல்லி எந்த நாதியும் இல்லை என்ன நடக்கப்போகின்றது என்று மக்களுக்கு தெரியாது இங்கு சுதந்திரம் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் சுயமாக சிந்திக்கமுடியாத மக்களாக இந்த அரசியல் காலம் உருவாக்கி  இருக்கின்றது.தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக போர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்தேசியக்கூட்மைப்பு இருந்தது பல கட்சிகள் இணைந்துதான் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது விடுதலைப்புலிகளின் தலையீட்டுடன் தான் உருவாக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும், அன்று இருந்த  22 பாராளுமன்ற உறுப்பினகள் போர் நடைபெற்றபோது என்ன செய்தார்கள் அவர்கள் ஒன்றும் சரியாக செய்யவில்லை.இன்று அரசாங்கம் பிளைவிட்டதாக கூவி தங்கள் அரசியலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பினை 30 ஆண்டுகால போரின் பின்னர் மக்கள் நம்பினார்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக அதிகளவான வாக்குகளுடன் இருந்தார்கள் அவர்கள் வங்குறோத்து அரசியலை செய்தார்கள் இன்று தமிழர் தரப்பின் பின்னடைவிற்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு முக்கியமான காரணம், இன்று எல்லா கட்சிகளும் உடைந்து சென்று தமிழரசு கட்சி மட்டும் நிக்கின்றது. தமிழரசு கட்சி மட்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கிடையாது அனைத்து கட்சிகளும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.சரிபிழைகளுக்கு அப்பால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக பேரம்பேசும் நிலைக்கு அவர்கள் அன்று இருந்தார்கள்.தமிழரசு கட்சி மட்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இல்லை அது தந்தை செல்வாவின் கட்சி இன்று எல்லாம் மாறிப்போய்விட்டது.கடந்த தேர்தலினை பார்தீர்கள் என்றால் தென்னிலங்கை கட்சி முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களையும் வன்னியில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது. வாக்கு சிதைவுகள்தான் இங்கு நடைபெற்றுள்ளது.பாராளுமன்றம் என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் பாராளுமன்றம் என்பது பிரதேச சபைபோல் எங்கள் பிரச்சினைகளை கதைக்கும் இடம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்  பாராளுமன்றம் என்பது இலங்கையின் உயர்ந்த சபை சட்டம் இயற்றுகின்ற சபை நீதிமன்றத்திற்கு வரும் சட்டங்கள் அனைத்தும் இயற்றப்படும் சபைதான் பாராளுமன்றம் அது மிகவும் அறிவார்த்தமான சபை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமூலத்தினை பாராளுமன்றம் கொண்டுசெல்லும் திறமை உண்டு அங்கு கொண்டு. சிங்கள மக்களையம் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும் எங்கள் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு அதிகமாக விளங்கப்படுத்தவேண்டும் நாங்கள் இந்த மண்ணினை அதிகமாக நேசித்தவர்கள் தமிழ்மக்கள் இந்த மண்ணினை நேசிக்கின்றார்கள்பொருளாதாரம் கீழான நிலையில் இலங்கை இருக்கின்றது இதனை மீட்கும் நிலை தமிழர்களிடம் தான் இருக்கின்றது ஆனால் அந்த கட்டமைப்பு உருவாக்கக்கூடிய இடத்தில் எங்களின் அரசியல் நிலமை இல்லை தேர்தல் அரசியல் நோக்கி தனிப்பட்ட பதவிவெறிகளில்தான் இருக்கின்றார்கள்.சட்டம் இயற்றக்கூடிய சபைக்கு என்னென்று கதைக்கத்தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்கின்றார்கள்.இன்று பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது அதனை நீக்குவதற்கான என்ன உத்திகள் எடுத்துள்ளார்கள் எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement