• Nov 07 2025

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட பாண்டிச்சேரி மீனவர்களுக்கு விளக்கமறியல்!

shanuja / Oct 15th 2025, 4:50 pm
image

இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாண்டிச்சேரி மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



நெடுந்தீவு கடலில்  கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி   எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் குறித்த மீனவர்கள்  கைது கைது செய்யப்பட்டனர்.  


கைதான மீனவர்கள் கடந்த  மாதம்  முதலாம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று மீளவும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்  விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது 29 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை  விசாரித்த ஊர்காவற்றுறை  நீதவான் நளினி சுபாஸ்கரன்   எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மீனவர்கள் 29 பேரையும்  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட பாண்டிச்சேரி மீனவர்களுக்கு விளக்கமறியல் இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாண்டிச்சேரி மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடலில்  கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி   எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் குறித்த மீனவர்கள்  கைது கைது செய்யப்பட்டனர்.  கைதான மீனவர்கள் கடந்த  மாதம்  முதலாம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று மீளவும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்  விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 29 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை  விசாரித்த ஊர்காவற்றுறை  நீதவான் நளினி சுபாஸ்கரன்   எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மீனவர்கள் 29 பேரையும்  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement